மது விற்ற 2 பேர் சிக்கினர்

பெரியகுளம் பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-10-07 16:14 GMT

பெரியகுளம் தென்கரை போலீசார் வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி விற்பனைக்காக மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் மோகன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். இதேபோல், மற்றொரு கடையில் இருந்த 9 மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டன் (29) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்