சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-18 18:39 GMT

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியாண்டி சின்னபூசாரி (வயது 65). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான சான்றிதழை போலீசார் காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்