பணம் கேட்டு மிரட்டல்; 2 பேர் சிக்கினர்

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-14 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 37) கூலி தொழிலாளி. இவர் முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (25), முனியசாமி நகரைச் சேர்ந்த ரமேஷ் (26) ஆகிய 2 பேரும் முனியசாமியை கத்தியை காட்டி, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்