குடியாத்தம், வளத்தூர் பகுதியில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல வளத்தூர் ரெயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.