கொசு ஒழிப்பு எந்திரம் வெடித்து 2 பேர் காயம்
விக்கிரவாண்டி அருகே பரபரப்பு கொசு ஒழிப்பு எந்திரம் வெடித்து 2 பேர் காயம்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த ராதாரபுரம் வட்டார அரசு ஆஸ்பத்திரிக்குட்பட்ட ராதாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை களப்பணியாளர்கள் ராதாபுரத்தை சேர்ந்த கோவிந்தன்(வயது 48), தினேஷ்(40) ஆகிய இருவரும் எந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக புகை மருந்து அடிக்கும் எந்திரம் வெடித்தது. இதில் கோவிந்தன் பலத்த தீக்காயமும், தினேஷ் லேசான காயமும் அடைந்தனர். உடனே அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறாா்கள். இந்த சம்பவம் விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.