விபத்தில் 2 பேர் படுகாயம்

கார், மோட்டார்சைக்கி்ள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-19 20:58 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் புலமாடகண்ணன் (வயது 27). சம்பவத்தன்று இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (30) என்பவரும் களக்காடு சென்று விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

மேலக்கருவேலங்குளம் அருகே வந்த போது, எதிரே சேரன்மாதேவியில் இருந்து களக்காடு நோக்கி கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமணன், புலமாட கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து லட்சுமணன் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்