சங்ககிரி அருகேகாரில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்

சங்ககிரி அருகே காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்.

Update: 2023-01-31 19:56 GMT

சேலம், 

சேலம் வழியாக கேரளாவுக்கு காரில் விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது காருக்குள் மெத்தலின் டைஆக்சிஆம்பிடைமன் என்ற விலை உயர்ந்த போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் வந்த கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, 'சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடியில் போலீஸ் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தி வந்ததாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்