ஆடு திருட முயன்ற 2 பேர் கைது

ஆடு திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-17 20:22 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த சங்கர் (வயது 35), கீழ தேவநல்லூரைச் சேர்ந்த முருகன் (35) ஆகியோர் 2 ஆடுகளை திருடிச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு வந்த வேல் ஆடுகளை திருடி செல்வதை கண்டு சத்தம் போட்டார். அவரது சப்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து திசையன்விளை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்