அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொபட்- மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-17 18:42 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொபட்- மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெடுஞ்செழியன், விவேகானந்தம் மற்றும் போலீசார் சம்பவத்தன்று நீடாமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொபட்டில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பழைய நீடாமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த கோகுலன் (வயது20) என்பதும், வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி சென்றதும் தெரிய வந்தது.

மணல் அள்ளிய 2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொபட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல் வாசுதேவமங்கலம் ஆற்றில் அனுமதியின்றி மினி லாரியில் மணல் ஏற்றி வந்த பன்னிமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்