அரக்கோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
அரக்கோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் தாசன், ரவி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) மற்றும் தணிகை போளூர் பகுதியை சேர்ந்த நிர்மல் (21) என்பதும் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற போது பிடிபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விலையுயர்ந்த 2 மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.