புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மளிகை கடையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 30 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பொய்யப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராணி (42) என்பவரை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.