புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கோவை
கோவை வெறைட்டிஹால் ரோடு, நீலிக்கோணாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சரஸ்வதி (வயது 45), வடமாநிலத்தை சேர்ந்த தீபங்கார் தோலை (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 75 புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.