புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-10 19:11 GMT

விராலிமலை பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் விராலிமலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாமணி தலைமையிலான போலீசார் விராலிமலை அம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் குமரன் நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 62) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அன்னவாசல் போலீசார் மாங்குடி கடைவீதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மாபட்டிணத்தை சேர்ந்த இப்ராகீம் (43) என்பவரிடம் இருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்