புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-16 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மணிகண்டன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்