புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே தோகைப்பாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி(வயது 58) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 35 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போல் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த விழுப்புரம் அலமேலுபுரத்தை சேர்ந்த ராஜாராம்(60) என்பவரை மேற்கு போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 21 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.