பொள்ளாச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது
பொள்ளாச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ். காலனியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்வதாக நகர கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைக்குள் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45), சின்ன பாஸ்கர் (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 40 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.