தக்கலை:
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமியார் மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்த வலிய விளையை சேர்ந்த விக்னேஷ் (27) என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது போல் பிலாங்காலை பகுதியில் மது விற்பனை செய்த காப்பி காடு பகுதியை சேர்ந்த ஜெகன் (41) என்பவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர் பின்னர் இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.