சாராயம் விற்ற 2 பேர் கைது
சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலம்,
சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஆனந்தராசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் அருகே கல்லாநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜா (வயது 37) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் காட்டானந்தல் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்றதாக வெங்கடேசன் மனைவி சிவகாமி(38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.