சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-11-14 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரியில் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணியை(வயது 35) போலீசார் கைது செய்தனர். இதேபோல் அரசராம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகமணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்