நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஏரவாஞ்சேரி, நீலப்பாடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவில் அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் மகன் சூர்யா (வயது 27), நீலப்பாடி மேலத்தெரு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பிரவின் (21) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.