மது விற்ற 2 பேர் கைது

அரக்கோணம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-30 18:54 GMT

அரக்கோணம் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் வேடல், சாலை கிராமம், குருவராஜப்பேட்டை மற்றும் ஈஸ்லாபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குருவராஜபேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கன்னியப்பன் (வயது 45), என்பதும் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈசலாபுரம் பகுதியில் மது விற்ற அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்