மது விற்ற 2 பேர் கைது
வருசநாடு அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
வருசநாடு போலீசார் நேற்று வாலிப்பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முருக்கோடை வைகை ஆற்று பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது 52) என்றும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல பவளநகர் கண்மாய் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சங்கிலியாண்டி (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.