மது விற்ற 2 பேர் கைது

போடி பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-18 19:00 GMT

போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது முனிசிபல் காலனி பகுதியில் மாரிச்சாமி (வயது 48) என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்சாமியை கைது செய்தனர்.

இதேபோல் போடி வஞ்சி ஓடை தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி (62) என்பவர் தனது பெட்டி கடையில் மதுபாட்டில் விற்பனை செய்து வந்தார். அவரை போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்த 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்