மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-19 18:51 GMT

குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் மற்றும் பணிக்கம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வாளாந்தூர் பகுதிக்கு சென்ற போலீசார், அப்பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற செந்தில்குமார் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அதேபோல் நடுப்பட்டி இரட்டை வாய்க்கால் பகுதியில் மது விற்ற பணிக்கம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி(45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த தலா 6 பாட்டில்கள் வீதம் மொத்தம் 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்