மது விற்ற 2 பேர் கைது

கோத்தகிரியில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-24 13:53 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நேற்று மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காந்தி மைதானம் அருகே கோடநாடு காந்திநகரை சேர்ந்த வெங்கடாச்சலம் (வயது 61) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த கொணவக்கரையை சேர்ந்த மூர்த்தி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்