மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-09-08 22:30 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக கொண்டையம்பாளையம் பத்மா நகரை சேர்ந்த தங்கமணி (வயது 50) என்பவரையும், இந்திரா நகர் புது காலனியை சேர்ந்த தங்கவேல் (60) என்பவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்