மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-10 19:24 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுண்டகுடி கிராமத்தில் சிலர் மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுவிற்ற 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சுண்டகுடி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 27), செங்கராயன் கட்டளையை சேர்ந்த பழனிசாமி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 46 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்