குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் தனது வீட்டின் அருகே மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வீரமலை (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுப்பாளையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே மது விற்ற புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலை (64), அவரது மகன் இளங்கோவன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலையை கைது செய்தனர். அவரிடமிருந்து 331 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை தேடி வருகின்றனர்.