போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது
கூடலூரில் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்
கூடலூர் நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் கூடலூர்-வயநாடு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட எம்.டி.எம். போதைப்பொருள் 3 கிராம் வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 ஆயிரம். விசாரணையில் அவர்கள் புஷ்பகிரியை சேர்ந்த அனூப் (வயது 27), அஸ்வின் (28) என்பது தெரியவந்தது. அவர்களை கூடலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.