சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 18:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒதியம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த, அதே கிராமத்தை சேர்ந்த பச்சமுத்துவை (வயது 50) போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சிறுகுடல் கிராமத்தில் பீல்வாடி-அருமடல் சாலையில் உள்ள ஓடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சிறுகுடல் தெற்கு தெருவை சேர்ந்த செல்லப்பிள்ளையை(45) மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுன. மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்