கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தென்னூர் ஜெனரல்பஜார் பகுதியை சேர்ந்தவர் அல்அமீன் (வயது 21). இவர் தென்னூர் ஹைரோட்டில் உள்ள ஒரு உணவகம் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், கத்திமுனையில் அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துச்சென்றனர். இதுகுறித்து அவர் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அல்அமீனிடம் பணத்தை பறித்து சென்றது குப்பாங்குளத்தை சேர்ந்த அருண் (23), கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.