சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-20 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அடுத்த தொண்டனந்தல் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக, பகண்டைகூட்டுரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தலு. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் தொண்டனந்தல் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மையனூர்கிராமத்தை சேர்ந்த நோயல் மகன் ஜான்பீட்டர், வில்லியம் மகன் சைமன்லூர்துசாமி (வயது 30), விரியூரை சேர்ந்த மோயிசன் மகன் டேவிட்குமார் (30) ஆகியோர் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு சைமன்லூர்துசாமி, டேவிட்குமார் ஆகிய 2 பேரை மட்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தவிர அங்கிருந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். தப்பி ஓடிய ஜான்பீட்டரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்