உடும்புக்கறி சமைத்த 2 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே உடும்புக்கறி சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ், பாலகிருஷ்ணன். இவர்கள் வனப்பகுதியில் இருந்த உடும்பை பிடித்து அங்கு சமைத்துக் கொண்டிருந்தனா். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து புளியங்குடி வனச்சரகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.