மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 2 பேர் கைது

தேனி அருகே மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-30 14:57 GMT

தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டு 2 பேர் வந்தனர்.

விசாரணையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் அள்ளி வந்த கோடாங்கிபட்டியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 55), செல்லக்கண்ணு (70) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்