வாலிபரை தாக்கி சங்கிலி பறித்த 2 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே வாலிபரை தாக்கி சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-18 20:25 GMT

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசரவணகுமார் (வயது 28). இவர் கே.டி.சி. நகரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தியாகராஜநகரில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து சிவசரவணகுமார் கங்கைகொண்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை- பொட்டல் 4 வழிச்சாலையில் சென்றபோது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த சிவசரவணகுமார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்து (22), பாலா (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சிவசரவணகுமாரை தாக்கி தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 17 வயது சிறுவனை நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்