2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கண்டக்டர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-03-18 20:42 GMT

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஜான்சிநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). அரசு போக்குவரத்து கழகத்தில் தூத்துக்குடியில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த முத்து என்ற கோடா, கிஷோர் டேனியல், சில்வஸ்டர், கண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய கன்னியாகுமரியை சேர்ந்த முகமது சம்சீர் (20), மரிய அந்தோணி ஆக்னஸ் என்ற ஆர்க் (31) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்