கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி பொன்மலை சோமசுந்தரம்நகர் அருகே உள்ள சுடுகாடு அருகே கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹேமச்சந்திரன்(வயது 27), சதிஷ்குமார்(28) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ஹேமச்சந்திரன் மீது காந்திமார்க்கெட் பகுதியில் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கும், சதிஷ்குமார் மீது பொன்மலை போலீஸ் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை தாக்கி பணத்தை பறித்து சென்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே ஹேமச்சந்திரன் மற்றும் சதிஷ்குமார் ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.