வெவ்வேறு விபத்தில் 2 பேர் காயம்
வெவ்வேறு விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்
சிவகாசி
திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்தவர் காவேரி (வயது 48). பெயிண்டரான இவர் சிவகாசி போஸ் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். அப்போது எதிர்பாராமல் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவேரி மகன் பாண்டீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் பள்ளப்பட்டி மாரியம்மன்நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் மணிபாரதி (23). இவர் சுக்கிரவார் பட்டியில் உள்ள அட்டைதயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மணிபாரதி மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் சூலக்கரையை சேர்ந்த வேடசந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.