சாலை விபத்தில் ௨ பேர் படுகாயம்
சாலை விபத்தில் ௨ பேர் படுகாயம் அடைந்தனர்.
தோகைமலை அருகே உள்ள வடசேரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (49). இவரது மனைவி பெரியக்காள் (40). அதே பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர்கள் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு கடந்த 22-ந்தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். சின்னப்பனையூரில் காவல்காரன்பட்டி செல்லும் சாலையில் வந்த எதிரே வந்த 4 சக்கர வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மாரிமுத்து, மகாலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்து, மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெரியக்காள் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.