மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2023-10-10 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை வேளையில் மது விற்பனை நடந்து வருவதாக இரணியல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் உத்தரவு படி இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். இதில் திங்கள்நகர், பேயன்குழி, மைலோடு, தலக்குளம், செட்டியார் மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது.

இந்தநிலையில் இரணியல் சந்திப்பு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடுத்து உள்ள பெட்டி கடையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது54) என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல திங்கள்நகர் நேசமணி பூங்கா எதிரே உள்ள பெட்டி கடையில் மது விற்றதாக எழிலரசி (56) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்