கதண்டு கடித்து வக்கீல் உள்பட 2 பேர் காயம்

கதண்டு கடித்து வக்கீல் உள்பட 2 பேர் காயம்

Update: 2023-04-27 18:45 GMT

திருவாரூர் விளமல் தொகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. நேற்று கலெக்டர் அலுவலகத்தின் வழியாக கோர்ட்டுக்கு வக்கீல் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தின் அருகே சென்றபோது கதண்டு அவரை கடித்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கதண்டுகளை அகற்ற முயன்ற போது அவரையும் கதண்டு கடித்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்