விபத்துகளில் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் பலி

விபத்துகளில் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-01-19 19:58 GMT

தா.பேட்டை:

பஸ் மோதி சாவு

தா.பேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் ஊராட்சியை சேர்ந்த இலுப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அரங்கராஜன்(வயது 70). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், நேற்று மாலை இலுப்பூரில் இருந்து முத்துராஜாபாளையம் - மகாதேவி செல்லும் சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது எதிரே மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ், மொபட்டின் மீது ேமாதியது. இதில் பலத்த காயமடைந்த அரங்கராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரங்கராஜனின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் டிரைவர் கனகராஜ்(57) மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 63). இவர் திருச்சியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இருந்து சில பயணிகளை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். வெஸ்ட்ரி பள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த பள்ளியின் சுவற்றில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்