முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் படுகாயம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-01-20 19:01 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை தாழைநகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் கிருஷ்ணாபுரத்தில் இருந்து தாழைநகர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வெங்கலம் அருகே சென்றபோது எதிரே வெங்கலத்தை சேர்ந்த சிவகுமார்(27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சதீஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சதீஷை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சிவகுமாரை திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்