மார்த்தாண்டம் அருகே வாழைகுலைகளை திருடிய மினி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே வாழைகுலைகளை திருடிய மினி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே வாழைகுலைகளை திருடிய மினி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழைக்குலைகள் திருட்டு
மார்த்தாண்டம் அருகே பாறைவிளை பகுதியை சேர்ந்தவர் ரெஞ்சிதபாய். இவருடைய வாழைத் தோட்டத்திற்குள் மர்மஆசாமிகள் புகுந்து வாழைக்குலைகளை வெட்டி திருடி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ரெஞ்சிதபாய் தோட்டத்திற்கு சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மினி பஸ் டிரைவர் வினு (வயது 45) மற்றும் ராஜேஷ் (38) ஆகிய இருவரும் 3 வாழைக்குலைகளை திருடி சாக்கு மூட்டையில் கட்டி சென்றதை பார்த்து விட்டார்.
இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினு மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.