பொள்ளாச்சி, கோட்டூரில் டிரைவர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது

பொள்ளாச்சி, கோட்டூரில் போக்சோ வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-08 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, கோட்டூரில் போக்சோ வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி திருமணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 19). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அவர் வேறு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி சந்தேகப்பட்டு இதுகுறித்து கபில்தேவிடம் கேட்டு உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கபில்தேவ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்

இதேபோல் கோட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் மணிமாறன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில் சிறுமிக்கு 17 வயது ஆவதால் சிறுமியின் பெற்றோர் 18 வயதிற்கு பிறகு திருமணம் செய்து வைக்கிறேன் என்று நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி திடீரென்று அந்த சிறுமி காணாமல் போனதாக தெரிகிறது. இதையடுத்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மாயம் என்று வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணிமாறன் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ வழக்கில் போலீசார் மணிமாறனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்