மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-07-06 19:03 GMT

தா.பேட்டை, ஜூலை.7-

வெவ்வேறு சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

மூதாட்டி சாவு

தா.பேட்டையை அடுத்த அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சின்னகண்ணு (16), சங்கர் மகன் தினேஷ்குமார் (16) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வாளசிராமணி - தலைமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாளசிராமணி கிராமத்தில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காத்தாயி (70) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூதாட்டி காத்தாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தவிபத்தில் காயமடைந்த தினேஷ்குமார், சின்னகண்ணு ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

காட்டுப்புத்தூர் அருகே உள்ள கீழக்காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் (45). இவரும் மேலக்காரைக்காடு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (34) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கீழக்காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அழகேசன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்