வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2023-04-27 20:41 GMT

திருச்சி பொன்மலைப்பட்டி ராஜா தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கஞ்சா விற்ற வழக்கில் ராம்ஜிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சுப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

இதுபோல் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (41). வழிப்பறி வழக்கில் பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்