வெவ்வேறு சம்பவங்களில் நர்சு உள்பட 2 பேர் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் நர்சு உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-10-28 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்த பிச்சைமணி மகள் ரமணீஸ்வரி (வயது 28). மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் ரமணீஸ்வரி அரசு வேலைக்கு தேர்வு எழுதி உள்ளதாகவும், வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் சங்கரபாண்டி (20). கடந்த சில மாதங்களாக இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாவில்லை. கடந்த 26-ந்தேதி இவர் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்