ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாளார்கள்

Update: 2022-07-11 18:58 GMT

சமயபுரம்,ஜூலை.12-

துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி இலுப்பையூர் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (45). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பட்டூர் செல்லும் பிரிவு சாலையில், சாலையை கடக்க நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மருங்காபுரி தாலுகா, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்