கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-09 18:45 GMT

கோவை

கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் விஜய் (வயது 21), நகை தொழிலாளி. இவர் நகைப்பட்டறையில் வேலை செய்தபோது அங்கு வந்த கோவையை சேர்ந்த கல்லூரி மாணவரான சிவமணிகண்டன் (19), சஞ்செய் ஆகியோர் கடைக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

அதுபோன்று காந்திபுரத்தில் செருப்பு வியாபாரம் செய்து கொண்டு இருந்த நவநீதன் என்பவரிடம் ரூ.450-ஐ எடுத்துக்கொண்டு ஒருவர் தப்பி ஓடினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த அஜீஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்